இயற்கையாகவே வார்த்தைகள் மேல் எனக்கொரு காதல் உண்டு.
சதா இயங்கிக்கொண்டே இருக்கும் உலகில் வார்த்தைகளும் அதன் பாட்டிற்கு இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. யுகம்யுகமாக எண்ணிலடங்கா மனங்களில் இருந்து ஓசையோடு உணர்வும் உணர்ச்சியும் சேர்ந்து உயிர் கொடுத்து பிறந்த வார்த்தைகள் காற்றைப்போல எங்கும் நீக்கமற நம்மை சுற்றி நிறைந்துள்ளன.
பிறந்த வார்த்தைகளின் சம்பாஷணைகளும்
பிறவாத வார்த்தைகளின் கணமும் சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் எத்தனையோ.
இப்படி வார்த்தைகள் கடத்தும் உணர்வுக்கும் அவை உணர்த்துகின்ற பொருளுக்கும் எப்போதும் ஒரு தனித்தன்மை உண்டு. அதில் மூழ்கி திளைப்பதில் எனக்கு எப்போதும் ஒரு ஆர்வமும் உண்டு. அதற்கான தேடல் தான் இந்த சொல்லும் பொருளும்.
சொற்களுக்குள் மிஞ்சாத பொருளும் பொருளுக்குள் சிருஷ்டிக்கும் சொல்லப்படாத மௌனமும் தான் இந்த தேடலின்மையம் .
இனி, சொல்லும் பொருளுமாக நானும் தேடலும்..
No comments:
Post a Comment